மேலும் அறிய

தஞ்சாவூர்: கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கி சேதம்

’’பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை’’

வட கிழக்கு பருவ மழையை தொடங்கியதையடுத்த, தஞ்சாவூர் மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமை முதல் மீண்டும் பெய்த தொடர் மழை பெய்ததால், அம்பது மேல்நகர கிராமத்திலுள்ள கோணக்கடுங்கலாறு கரை உடைந்து சுமார் 1,500 ஏக்கரில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.

தஞ்சாவூர்: கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கி சேதம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் 17,500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. மழை குறைந்ததை தொடர்ந்து, வயலில் தேங்கிய தண்ணீர் வடிந்தது. வடிகால்  வாய்க்கால் தண்ணீர் வடியாத பிரச்னையாலும், அவ்வப்போது மழை பெய்வதாலும் 9,245 ஏக்கரில் தேங்கிய தண்ணீர் வடிவதில் தாமதமாகிறது. தற்போது இப்பயிர்கள் அழுகி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை மீண்டும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களிலும் பலத்த மழை பெய்ததால், அண்மையில் நடவு செய்யப்பட்ட சம்பா பருவ இளம் பயிர்கள் நீரில் மூழ்கின. இதேபோல, திருவையாறு வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால் தஞ்சாவூர் அருகே வரகூர் அம்பதுமேல் நகரம் இடையே கோணக்கடுங்கலாறில் தென் கரையில் சுமார் 20 அடி நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டது. இதனால், ஐம்பதுமேல் நகரம், கடம்பங்குடி, வரகூர், நடுக்காவேரி, அந்தலி, குழிமாத்தூர் ஆகிய 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பருவ நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. இதில், சில நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட இளம் நாற்றுக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

தஞ்சாவூர்: கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கி சேதம்

அகரப்பேட்டையில் கிராமத்திலுள்ள வெண்ணாற்றிலிருந்து,  பிரியும் கோணக்கடுங்கலாறு நாகத்தி கிராமத்தில் வெட்டாற்றில் கலக்கிறது. இதன் மூலம் ஏறக்குறைய 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. ஆனால், அம்பதுமேல் நகரம்- அந்தலி கிராமங்களை இணைக்கும் தரைப்பாலத்தில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதன் காரணமாக, தண்ணீர் செல்ல முடியாமல்,  தரைப்பாலம் மூடப்பட்டுள்ளதால் நீரோட்டம் தடைப்பட்டு வரகூர்- ஐம்பது மேல் நகரம் இடையே உடைப்பு ஏற்பட்டு, சம்பா பருவ நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாகி கடல் காட்சியளித்தது.

தஞ்சாவூர்: கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கி சேதம்

இது குறித்து தகவலறிந்த திருவையாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் முன்னிலையில் சுமார் 50 விவசாயிகள் தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ள செடி, கொடிகளை அகற்றி வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், சம்பா பருவ நெற் பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீடு பாதி பேர் செய்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தரை பாலத்தில் ஏற்படும் அடைப்பால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இத் தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இழப்பீடும் வழங்க என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Breaking LIVE : நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
Breaking LIVE : நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

P Chidambaram Slams Modi  : VK Pandian Profile : மோடியை அலறவிட்ட தமிழன் ஒடிசாவின் முடிசூடா மன்னன் யார் இந்த VK பாண்டியன்?Dinesh karthik Retirement  : RCB-யின் காப்பான்! தினேஷ் கார்த்திக் கடந்து வந்த பாதை!Arvind Kejriwal on PM Candidate Rahul  : மம்தா பாணியில்  கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளரா ராகுல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Breaking LIVE : நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
Breaking LIVE : நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
Vadakalai vs Thenkalai: மீண்டும் வடகலை, தென்கலை பிரச்னை... தடை மீறி தொடரும் பஞ்சாயத்து... முகம் சுளிக்கும் பக்தர்கள்..!
மீண்டும் வடகலை, தென்கலை பிரச்னை... தடை மீறி தொடரும் பஞ்சாயத்து... முகம் சுளிக்கும் பக்தர்கள்..!
Atal Pension Yojana: மாதம் வெறும் ரூ.210, சாகும் வரை ரூ.60,000 பென்ஷன் - அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தெரியுமா?
Atal Pension Yojana: மாதம் வெறும் ரூ.210, சாகும் வரை ரூ.60,000 பென்ஷன் - அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தெரியுமா?
Embed widget